மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை எட்டிப்பிடித்த சாஹல்!
ஒரு ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை நான்கு முறை வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை சாஹல் சமன் செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திரா சாஹல் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த சீசனில் அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சாஹல் இதுவரை 4 சீசன்களில் 20 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சாளர் ஒருவர் நான்கு முறை ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை எடுப்பது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு இலங்கையின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா இந்த சாதனையை செய்திருந்தார். தற்போது சாஹல் அதனை சமன் செய்துள்ளார்.
மலிங்கா 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆகிய நான்கு சீசன்களில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சாஹல் 2015, 2016, 2020 மற்றும் 2022 ஆகிய சீசன்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.