திட்டமிட்ட சதி: ஹிண்டன்பர்க் அறிக்கையை குறிப்பிட்டு பேசிய கவுதம் அதானி
அதானி குரூப்பின் வருடாந்திர கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் அக்குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி இன்று யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 2022- 23ம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் நிதி நிலையை வெளியிட்டதுடன், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை ஒரு திட்டமிட்ட சதி எனக்குறிப்பிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அதாவது, போலியான நிறுவனங்கள் மூலம் பரிவர்த்தனை, பங்குச்சந்தையில் விதிமீறல்கள், அதிகப்படியான கடன் என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இந்த அறிக்கைக்கு பின்னர் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இந்நிலையில் தற்போது அதானி வெளியிட்டுள்ள வீடியோவில், அதானி குழுமத்தின் பெயரை கெடுக்கவே அறிக்கை வெளியிட்டதாகவும், 2004 முதல் 2015ம் ஆண்டு வரையில் நடந்த விடயங்களை அடிப்படையாக வைத்து அறிக்கை தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வெளியான பின்பு, அதானி குழுமம் பல பில்லியன் டொலர்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2022-23ம் ஆண்டில் அதானி குரூப்-ன் மொத்த வருமானம் 85 சதவீதம் அதிகரித்து 2,62,499 கோடி ரூபாயாக உள்ளதாகவும், அவுஸ்திரேலியா, இஸ்ரேல், இலங்கை மற்றும் வங்கதேசம் என அதானி குழுமம் தன்னுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |