பிரித்தானியாவில் சொந்தமாக கால்பந்து அணி... பல கோடிகள் நிறுவனத்தின் உரிமையாளர்: யார் இந்த அனுராதா
மராட்டிய மாநிலத்தில் மிகப் பெரும் கோடீஸ்வர பெண்மணிகளில் ஒருர் அனுராதா ஜிதேந்திர தேசாய். இவரது மொத்த சொத்து மதிப்பு 780 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
சொத்து மதிப்பு ரூ.780 கோடி
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கோழி பண்ணை விவசாயத்திற்கு முன்னோடியாக இருக்கும் நிறுவனம் வெங்கடேஸ்வரா ஹேச்சரிஸ் குழுமம். இந்த நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை குடும்பத்தை சேர்ந்தவர் அனுராதா ஜிதேந்திர தேசாய்.
இவரே தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், அனுராதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.780 கோடி என்றே கூறப்படுகிறது.
தந்தை பி.வி.ராவு மறைவுக்கு பின்னர், VH குழுமத்தின் தலைவராக பொறுப்புக்கு வந்தார் அனுராதா. இவரது சகோதரர்கள் இருவரும் கணவரும் VH குழுமத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
2022 மற்றும் 2023ல் மொத்தம் 4,233 கோடி அளவுக்கு விற்பனை நடத்தியுள்ளது. 1960களில் பி.வி.ராவு புனே நகருக்கு குடிபெயர்ந்த பின்னர் இந்த வணிகத்தில் களமிறங்கியுள்ளார்.
Blackburn Rovers
சட்டம் பயின்றுள்ள அனுராதா, பாடசாலை காலகட்டத்தில் இருந்தே, தந்தைக்கு உதவி வந்துள்ளதுடன், தொழில் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டுள்ளார். அனுராதா தந்தையுடன் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கிய பின்னர், VH குழுமம் திராட்சை மது விநியோகம் மற்றும் பொழுதுபோக்கிலும் கவனம் செலுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக VH குழுமம் பிரித்தானியாவில் பிரபலமான கால்பந்து அணிகளில் ஒன்றான Blackburn Rovers என்ற அணியை 2010ல் வாங்கியுள்ளனர். இந்திய குடும்பம் ஒன்று, பிரித்தானிய கால்பந்து அணி ஒன்றை சொந்தமாக்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |