நாட்டையே உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம்! பிணமாக தண்டவாளத்தில் கிடந்த குற்றவாளி: பாராட்டி தள்ளும் மக்கள்
இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியை பொலிசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அதிரடி திருப்பமாக அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
விளையாட சென்ற மகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது.
இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோதனை நடத்திய போது சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜு தலைமறைவானதால் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை எற்படுத்திய நிலையில் #JusticeForChaithra என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் தொடர்ந்து டிரண்டிங்கில் இருந்தது. பொலிசார் விசாரணையில் கூலி வேலை செய்துவரும் ராஜு, மது அருந்தி தினம்தோறும் மனைவியை அடித்து வந்ததால் மனைவியும் , அவரது தாயாரும் பிரிந்து சென்ற நிலையில், தனியாக வசித்து வந்த ராஜு, சிறுமியை கொலை செய்த பிறகு தலைமறைவானது தெரியவந்தது.
ராஜூ குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்தார்.
இந்த நிலையில் கொடூரன் ராஜூ கன்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார், இந்த தகவலை அமைச்சர் கே.டி.ஆர் உறுதி செய்துள்ளார்.
அவர் இரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#AttentionPlease : The accused of "Child Sexual Molestation and murder @ Singareni Colony, found dead on the railway track, in the limits of #StationGhanpurPoliceStation.
— DGP TELANGANA POLICE (@TelanganaDGP) September 16, 2021
Declared after the verification of identification marks on deceased body. pic.twitter.com/qCPLG9dCCE
இதனிடையில் தன்னை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் கூறியதால் எப்படியும் நாம் சிக்கி விடுவோம் என பயந்து ராஜூ இம்முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எப்படியிருந்தாலும் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டது என பொதுமக்கள் பலரும் சமூகவலைதளங்களில் தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
Disha Repeated! #PallakondaRaju #JusticeDelivered #JusticeforChaitra RIP Chaitra
— Ramesh Bala (@rameshlaus) September 16, 2021
Most Rapists walk free but in Telangana They won't be spared ??♂️?
— అడవి పులి ᴮʰᵉᵉᵐᴸᵃᴺᵃʸᵃᵏ (@RamcharanTulasi) September 16, 2021
RIP Chaitra #JusticeForChaitra pic.twitter.com/kGzXlsMv4X
That's what he deserve
— Bunny My IcoN™ VirAAt (@pavankalyanAllu) September 16, 2021
It is the justice by God ?
Justice Served ?
Rip chaitra ?#JusticeForChaitra pic.twitter.com/wCCmwmZSSq