டீ மணத்தால் குவியும் பணம்! பிரித்தானியா, கனடா மற்றும் உலகெங்கிலும் கலக்கும் இளைஞர்
தேநீர் எனப்படும் டீ-யை உலகம் முழுவதும் பரப்பி கோடிகளை அள்ளி ஆச்சரியம் கொடுக்கிறார் இளைஞர் ஒருவர்.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் சஷாங்க் ஷர்மா. இவர் தொடங்கிய The Tea Factory என்ற நிறுவனத்தின் தேநீர் உலகளவில் சக்கை போடு போடுகிறது. The Tea Factory அரபு நாடுகள், கனடா, பிரித்தானியா, நேபால், பங்களாதேஷ் என உலகளவில் 180 அவுட்லெட்களுடன் செயல்படுகின்றன.
எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது Cafe Coffee Day. காபி குடிக்க மட்டுமல்லாமல் வணிக ரீதியாக ஒன்றிணைய, டேட்டிங் செல்ல என பல்வேறு காரணத்திற்காக மக்கள் இங்கு ஒன்று கூடுவதைப் பார்த்தேன். இதையடுத்தே The Tea Factory ஐடியா வந்தது - சஷாங்க் ஷர்மா.
சஷாங்க் முதன் முதலில் தனது சொந்த நகரமான இந்தூரில் டீ கஃபே தொடங்க முடிவு செய்தார். ஆனால், அவரது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. எத்தனையோ போரட்டங்களைக் கடந்து வந்துள்ளார்.
indoremirror
சஷாங்க் தனது பெற்றோரிடமிருந்து 6 லட்ச ரூபாய் வாங்கிய முதலீடு கையில் இருந்தது. ஆனால் அனுபவமில்லாத ஒரு துறை. இருந்தாலும் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பானம் என்பதால் தேவை அதிகமிருக்கும், வெற்றியடையலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்யலாம் என யோசித்த சஷாங்க், 20 ரூபாய் முதல் 250 ரூபாய், 500 ரூபாய் வரை வெவ்வேறு டீ வகைகளை வழங்க ஆரம்பித்தார்.
சஷாங்க் வகுத்த இந்த உத்தி பலனளித்தது. இங்கு வந்தவர்கள் மற்றவர்களிடம் பரிந்துரை செய்திருக்கின்றனர்.
The Tea Factory ஒரு மாதத்திற்கு 1.5 லட்சம் கப் டீ விற்பனை செய்வதாக சஷாங்க் தெரிவிக்கிறார்.
indoremirror