மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் சர்க்கரை பொங்கல்: எப்படி செய்வது?
கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே தனிச்சுவை தான்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு தனி பிரியர்களே இருக்கின்றனர்.
அந்தவகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் சர்க்கரை பொங்கலை எப்படி வீட்டிலேயே ஈசியா செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- வெல்லம்- 3 கப்
- நெய்- 4 ஸ்பூன்
- முந்திரி- 10
- திராட்சை- 10
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் 2 முறை கழுவிய அரிசி சேர்த்து குழைய வேகவைத்து வடித்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சாதம் சேர்த்து அதனுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் நெய் சேர்த்து நன்கு கெட்டியாகி வரும்வரை கொதிக்கவிடவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கோவில் சர்க்கரை பொங்கல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |