வாணவேடிக்கையில் சதம் விளாசிய இலங்கை கேப்டன்! ஆசியக் கிண்ணத்தில் சிக்ஸர் மழை
மகளிர் ஆசியக் கிண்ணப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து சதம் விளாசினார்.
சமரி அதப்பத்து வாணவேடிக்கை
தம்புள்ளையில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடியது.
விஷ்மி குணரத்னே 1 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஹர்ஷிதா மாதவி, அணித்தலைவர் சமரி அதப்பத்துவுடன் கைகோர்த்தார்.
இந்த கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ஆக உயர்ந்தபோது ஹர்ஷிதா மாதவி (Harshitha Madavi) 26 (23) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
?CENTURY!?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 22, 2024
The Captain leads from the front! Chamari Athapaththu blasts her way to a magnificent 3️⃣rd T20I century! ?#WomensAsiaCup2024 #SLvMAL #GoLionesses pic.twitter.com/tegzguOUFx
சிக்ஸர் மழை
அதன் பின்னர் அதிரடியில் இறங்கிய சமரி அதப்பத்து (Chamari Athapaththu) சிக்ஸர் மழை பொழிந்தார். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அவருக்கு உறுதுணையாக அனுஷ்கா சஞ்சீவனி 31 (24) ஓட்டங்கள் எடுக்க, சமரி அதப்பத்து 3வது டி20 சதம் அடித்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது. சமரி அதப்பத்து ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 119 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
1st Player to score CENTURY in Women's T20 Asia Cup ?
— Female Cricket (@imfemalecricket) July 22, 2024
CHAMARI ATHAPATHTHU, Take a bow ? #CricketTwitter #WomensAsiaCup2024 ?ACC pic.twitter.com/QEpMtEIqsf
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |