முதல் இலங்கை வீராங்கனை! வரலாற்று சாதனை படைத்த சமரி அதப்பத்து
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.
சமரி அதப்பத்து
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 15 பந்துகளில் 40 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த மைல்கல்லினை எட்டிய முதல் இலங்கை வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
4வது வீராங்கனை
மேலும், சர்வதேச அளவில் 4000 ஓட்டங்கள் குவித்த 4வது வீராங்கனை என்ற பெருமையையும் சமரி அதப்பத்து பெற்றுள்ளார்.
நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் (4,758), இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா (4,538) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (4,216) ஆகியோர் 4000 ஓட்டங்கள் கடந்த வீராங்கனைகள் ஆவர்.
சமரி அதப்பத்து இதுவரை 164 டி20 போட்டிகளில் 4003 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |