20வது அரைசதம் அடித்த இலங்கை கேப்டன்! மகளிர் உலகக்கிண்ணத்தில் அபார ஆட்டம்
மகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து நியூஸிலாந்திற்கு எதிராக அரைசதம் விளாசினார்.
சமரி அதப்பத்து
கொழும்பில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
Chamari Athapaththu notches up her 20th ODI fifty! Leading from the front and powering the team! 🇱🇰🏏#SLvNZ #CWC25 pic.twitter.com/gySjWZgOn7
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 14, 2025
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 20வது அரைசதத்தை பதிவு செய்தார். 72 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சமரி அதப்பத்து மற்றும் விஷ்மி குணரத்னே(Vishmi Gunaratne) கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 101 ஓட்டங்கள் குவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |