வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இலங்கை மகளிர்படை
வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றியது.
சமரி அதப்பத்து அதிரடி
சில்ஹெட்டில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடந்தது. மழை காரணமாக 9 ஓவர்கள் போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 27 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார்.
இமேஷா 19 (10) ஓட்டங்களும், கவிஷா டில்ஹரி 15 (7) ஓட்டங்களும் விளாச, இலங்கை அணி 87 ஓட்டங்கள் குவித்தது.
முழுமையாக கைப்பற்றிய இலங்கை
பின்னர் ஆடிய வங்காளதேசம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்கள் எடுத்தது. சோபனா 21 ஓட்டங்களும், ஜுஐரியா 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

சமரி அதப்பத்து, சுகந்திகா குமாரி தலா 2 விக்கெட்டுகளும், நிமஷா மற்றும் மித்தாலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
3-0! Clean sweep for Sri Lanka against Bangladesh in T20I series 💪 pic.twitter.com/qSkvClpiIa
— Cricwire (@CricWireLK) May 2, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |