80 பந்தில் 140 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்! அசுரவேக ஆட்டத்தில் தொடரை கைப்பற்றிய இலங்கை
மகளிர் இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் சதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
மழையால் தடைபட்ட ஆட்டம்
இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி காலேவில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை விட்டதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு DL விதிமுறைப்படி 196 ஓட்டங்கள் 29 ஓவர்களில் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
Twitter (ICC)
இலங்கை கேப்டன் அதகளம்
அதன்படி இலங்கை அணி களமிறங்கி ஆடி வருகிறது. ரன் ரேட் அதிகமாக இருப்பதால் இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து அதிரடியில் மிரட்ட தொடங்கினார்.
சிக்ஸர் விளாசி தெறிக்கவிட்ட அவர், 60 பந்துகளில் சதம் அடித்தார். இது அவருக்கு 8வது ஒருநாள் சதம் ஆகும்.
Chamari Athapaththu celebrates her 8th ODI century! ?? Second one in this tournament. ? #LionessRoar #SLvNZ pic.twitter.com/b8pnSJ2ffz
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 3, 2023
மொத்தம் 80 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
History made! ?? Sri Lanka celebrates their historic victory against New Zealand Women with an 8-wicket win in the ODI series, clinching the series 2-1! ?#SLvNZ #LionessRoar pic.twitter.com/B8WVSiP3I1
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 3, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |