சதத்தை தவறவிட்ட இலங்கை கேப்டன்! தெறிக்கவிட்ட அனுஷ்கா, நிலக்ஷி
மகளிர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 275 ஓட்டங்கள் குவித்தது.
கடைசி போட்டி
மகளிர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி காலேவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணியில் சமரி அதப்பத்து, விஷ்மி குணரத்னே தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
Captain Chamari Athapaththu showing her class with a brilliant 91 runs against West Indies! ? #SLvWI #WomensCricket pic.twitter.com/wx0ukTlJBH
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 21, 2024
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் குவித்தனர். விஷ்மி 60 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் 91
அடுத்து வந்த ஹர்ஷிதா, ஹன்சிமா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அணித்தலைவர் சமரி அதப்பத்து சதத்தினை நெருங்கிய வேளையில், அஃபி பிளெட்சர் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். அவர் 106 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் குவித்தார்.
எனினும் நிலாக்ஷி டி சில்வா (63), அனுஷ்கா சஞ்சீவனி (55) அரைசதம் விளாச, இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவித்தது.
Nilakshi de Silva shines with a brilliant 63 runs against West Indies! ?What a performance! #SLvWI #WomensCricket pic.twitter.com/GEy8jrZH2Y
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 21, 2024
Anushka Sanjeewani lights up the crease with a brilliant 55 runs against the West Indies! ? #SLvWI #WomensCricket pic.twitter.com/avDYLiojDa
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 21, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |