ODIயில் 195 ரன் விளாசல்! ஜாம்பவான் ஜெயசூரியா சாதனையை நொறுக்கிய இலங்கை கேப்டன்
மகளிர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து 195 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
லௌரா வோல்வார்ட் 184
Senwes Park மைதானத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் மகளிர் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 184 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) அதிரடியில் மிரட்டினார். மறுமுனையில் பிரசதானி (4), ஹன்சிமா (3), கவிஷா (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
Winning Six by Chamari Athapaththu ?
— Female Cricket (@imfemalecricket) April 17, 2024
195* in 139 balls ? #CricketTwitter pic.twitter.com/eMVFnvgCNt
ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிலக்ஷி டி சில்வா, அணித்தலைவர் சமரி அதப்பத்துவுடன் கைகோர்த்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சமரி அதப்பத்து சாதனை
குறிப்பாக, சதம் விளாசிய சமரி அதப்பத்து 150 ஓட்டங்களை கடந்தார். இலங்கை அணி 45வது ஓவரிலேயே வெற்றி பெற்றது.
Sri Lanka cruise to a historic landmark in Women’s Cricket! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 17, 2024
They record the highest successful run-chase in Women’s ODIs. Sri Lanka beat South Africa by six wickets and level the 3-match ODI series 1-1! #WomenCricket #SAvSL #LionessesRoar pic.twitter.com/29HhxKeKrq
189 ஓட்டங்களில் இருந்த சமரி அதப்பத்து சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். அவர் 139 பந்துகளில் 5 சிக்ஸர், 26 பவுண்டரிகளுடன் 195 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் வீராங்கனை மற்றும் சர்வதேச அளவில் 3வது வீராங்கனை எனும் பெருமையை பெற்றார்.
அதேபோல் இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவையும் (189) முந்தி சமரி அதப்பத்து சாதனை படைத்தார்.
Chamari Athapaththu rewrites the history books! ??? #ChamariTheHurricane
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 17, 2024
Our star batter smashed a phenomenal 195* - the highest score EVER by a Sri Lankan woman in ODIs and the THIRD HIGHEST in the WORLD for women's ODIs! #WomensCricket #SAvSL #LionessesRoar pic.twitter.com/3FgRRj2wP7
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |