25 பந்தில் அரைசதம், 80 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்! நியூசிலாந்தை அடித்து நொறுக்கி சாதனை
மகளிர் இலங்கை அணி கடைசி டி20 போட்டியில், நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கடைசி டி20 போட்டி
மகளிர் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்பின் P Sara Oval மைதானத்தில் இன்று நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் சோஃபி டிவைன் 46 ஓட்டங்களும், பேட்ஸ் 37 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கையின் இனொக ரணவீரா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Twitter (@WomensCricZone)
சமரி அதப்பத்து அதிரடி
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அதப்பத்து ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Twitter (@WomensCricZone)
இதன்மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை சமரி அதப்பத்து படைத்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில் ஹர்ஷிதா 49 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 14.3 ஓவரிலேயே 143 ஓட்டங்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
Twitter (@WomensCricZone)
எனினும் நியூலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதை சமரி அதப்பத்துவும், தொடரின் சிறந்த வீராங்கனை விருதை சுஸீ பேட்ஸும் வென்றனர்.
Twitter (@WomensCricZone)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |