இலங்கையின் வீரமங்கைக்கு ஐசிசி விருது!
மகளிர் இலங்கை அணியின் கேப்டன் சமரி அதப்பத்து மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றார்.
சமரி அதப்பத்து
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மகளிர் இலங்கை கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.
Twitter (@OfficialSLC)
இந்தத் தொடரில் இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து, ஒரு அரைசதம் உட்பட 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதன்மூலம் அவர் தொடரின் சிறந்த வீராங்கனை விருதை வென்றார். இந்த நிலையில் இம்மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதினை சமரி அதப்பத்து வென்றுள்ளார்.
சிறந்த வீராங்கனை
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள பதிவில், 'இலங்கை கிரிக்கெட்டின் பரபரப்பான வீராங்கனை சமரி அதப்பத்து, ஐசிசியின் இம்மாதத்தின் சிறந்த மகளிர் வீராங்கனை பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் தலைசிறந்து விளங்குகிறார்! அவரது அபாரமான டி20 ஆட்டங்கள், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நம் அணியை இங்கிலாந்து மண்ணில் வரலாற்று தொடர் வெற்றிக்கு இட்டுச் சென்றது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka's cricket sensation, Chamari Athapaththu, reigns supreme as she secures the ICC Women’s Player of the Month title!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 13, 2023
Her incredible T20I performances, both with the bat and the ball, led our team to a historic series win on English soil.#LionessRoar pic.twitter.com/vkCjHP7Ams
33 வயதாகும் சமரி அதப்பத்து 122 டி20 போட்டிகளில் 2,651 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 8 அரைசதங்கள் அடங்கும்.
அதேபோல் 97 ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள், 15 அரைசதங்களுடன் 3,208 ஓட்டங்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 178 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |