எனது கவனம் நாட்டுக்காக விளையாடுவதில் உள்ளது! எந்த அணியாக இருந்தாலும் நான் நிரூபிப்பேன்..இலங்கை கேப்டன்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுடன் மோதல்
மகளிர் டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் இலங்கை அணி கிபெர்ஹாவில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
@icc-cricket
இலங்கை கேப்டன்
இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இலங்கை அணியின் கேப்டன் சமரி அதப்பத்து போட்டி குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், 'எனது கவனம் எனது நாட்டிற்காக விளையாடுவதில் உள்ளது. லீக்கில் விளையாடுவது வேறு விடயம். நான் எனது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளேன் மற்றும் சிறந்த முறையில் விளையாடியுள்ளேன். இந்தப் போட்டியில் எந்த அணியும் நானும் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்பதை நிரூபிப்பேன்' என தெரிவித்துள்ளார்.
@icc-cricket