சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்! பாகிஸ்தான் அணியை தரைமட்டமாக்கி..இறுதிப்போட்டியில் இலங்கை
Sri Lanka women beat pakistan by 8 wickets: மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
நிஸ்ஷினில் நடந்த மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஆயிஷா ஜாபர் 71
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 177 ஓட்டங்கள் குவித்தது. ஆயிஷா ஜாபர் 40 பந்துகளில் 71 ஓட்டங்களும், ஷாவால் ஜூல்பிகர் 54 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி சமரி அதப்பத்துவின் அதிரடியில், 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
சமரி அதப்பத்து ருத்ரதாண்டவம்
அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 26 பந்துகளில் 42 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. 22ஆம் திகதி இந்திய அணியை கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இலங்கை எதிர்கொள்கிறது.
