வெளிநாட்டு தொடரில் வாணவேடிக்கை காட்டிய இலங்கை பெண் சிங்கம்! 75 ஓட்டங்கள் விளாசிய வீடியோ
அவுஸ்திரேலிய தொடரில் இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து 75 ஓட்டங்கள் விளாசல்
32 வயதாகும் அதப்பத்து சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ஓட்டங்கள் குவித்துள்ளார்
மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் இலங்கை வீராங்கனை சமரி அதப்பத்து 59 பந்துகளில் 75 ஓட்டங்கள் விளாசினார்.
ஆடவர் கிரிக்கெட் தொடர் போல் அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் லீக் நடந்து வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் சமரி அதப்பத்து பிக் பாஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஹோபர்ட்டில் நடக்கும் இன்றைய போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் துடுப்பாடிய மெல்போர்ன் அணி 133 ஓட்டங்கள் எடுத்தது.
LARGE ? Chamari Athapaththu could hardly have hit this any better! #WBBL08 pic.twitter.com/gMhwU68LZH
— cricket.com.au (@cricketcomau) November 3, 2022
அதிரடியில் மிரட்டிய இலங்கை வீராங்கனை சமரி அதப்பத்து 75 ஓட்டங்கள் விளாசினார். மொத்தம் 59 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினார்.
Chamari leads the way, time to defend with the ball ? #WBBL08 #GETONRED pic.twitter.com/b4xO0NpE6v
— Renegades WBBL (@RenegadesWBBL) November 3, 2022
Twitter (@@WBBL)