2023யின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற இலங்கை கேப்டன்!
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அதப்பத்து, 2023ஆம் ஆண்டின் சிறந்த ODI வீராங்கனை விருதை வென்றார்.
இலங்கை அணித்தலைவர்
சமரி அதப்பத்து (Chamari Athapaththu) ஒருநாள், டி20 என இரு format கிரிக்கெட்டிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 139 பந்துகளில் 195 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
துடுப்பாட்டம் மட்டுமின்றி, பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் சமரி அதப்பத்து ஒருநாள் போட்டிகளில் 29 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
சிறந்த வீராங்கனை
101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3,513 ஓட்டங்களும், 129 டி20 போட்டிகளில் 2,834 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக ஐசிசியின் சிறந்த வீராங்கனை சமரி அதப்பத்து வென்றுள்ளார்.
2023யில் விளையாடிய 8 ஒருநாள் இன்னிங்சில் ஒரு சதம், 2 அரைசதங்களுடன் சமரி அதப்பத்து 415 ஓட்டங்கள் குவித்தார்.
Chamari Athapaththu with her ICC Women's ODI Cricketer of the Year 2023 trophy ? pic.twitter.com/JQbZXorzsg
— ICC (@ICC) May 4, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |