மே.தீ அணிக்காக தொடர் நாயகி விருது வென்ற இலங்கை கேப்டன்! சாம்பியனான பார்படாஸ் ராயல்ஸ்
மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் 2025 தொடரை சினெல்லே ஹென்றி தலைமையிலான பார்படாஸ் ராயல்ஸ் அணி வென்று சாம்பியன் ஆனது.
பார்படாஸ் ராயல்ஸ்
கயானாவில் நேற்று நடந்த மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில், பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கயானா அணி 3 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்தது. ஏமி ஹன்டர் 29 ஓட்டங்களும், ஷெமைனே கேம்ப்பெல்லே 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சமரி அதப்பத்து
கிசியா நைட் மற்றும் கார்ட்னே வெப் தலா 31 ஓட்டங்கள் எடுத்தனர். அஷ்மினி முனிசர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பார்படாஸ் ராயல்ஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
9 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்ததுடன், ஒரு விக்கெட்டும் கைப்பற்றிய ஆலியா அல்லேயனே ஆட்டநாயகி விருது பெற்றார்.
அதேபோல் இலங்கை கிரிக்கெட் அணியின் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 20 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசினார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் தொடர் நாயகி விருதைப் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |