கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை சுருட்டிய இலங்கை: சமரி அதப்பத்து அபாரம்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மீட்டெடுத்த ஃபெரோஸா, முனீபா
பாகிஸ்தான், இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
சதப் ஷாமஸ் 9 ஓட்டங்களிலும், சிட்ரா அமின் மற்றும் ஆயிஷா டக்அவுட் ஆகியும் நடையை கட்டினர். பின்னர் கைகோர்த்த குல் ஃபெரோஸா, முனீபா அலி கூட்டணி அணியை மீட்டெடுத்தது.
ஃபெரோஸா 40 ஓட்டங்கள் விளாசிய நிலையில் சமரி அதப்பத்து பந்துவீச்சில் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 110 ஆக இருந்தபோது, நிதானமாக ஆடிய முனீபா அலி (Muneeba Ali) 34 ஓட்டங்களில் சமரி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஃபாத்திமா சனா அதிரடி
அடுத்து அதிரடி காட்டிய நாஜிஹா அல்வியை 30 ஓட்டங்களில் சமரி வெளியேற்றினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, அணித்தலைவர் ஃபாத்திமா சனா விரைவாக ஓட்டங்களை சேர்த்தார்.
49 பந்துகளில் எதிர்கொண்ட ஃபாத்திமா சனா (Fatima Sana) ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Target set! 🎯
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 28, 2026
Pakistan Women post 187 on the board. 🇱🇰
It’s time for Sri Lanka Women to chase it down and seal the victory! 💪🏏#SLvPAK #SriLankaCricket pic.twitter.com/hZTZI4wBNq
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |