இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை!
உடன்படிக்கையை மீறியதால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சாமிகா கருணாரத்னேவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த மீறல்
அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சாமிகா கருணாரத்னே, வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் உள்ள பல சரத்துகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மூவர் அடங்கிய விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இடைக்கால தடை
அதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு சாமிகா கருணாரத்னே அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஓர் ஆண்டு தடை விதித்துள்ளது.
மேலும் அவருக்கு தண்டனையுடன் கூடுதலாக, 5000 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
@AP
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆசியக்கோப்பை வெற்றியில் சாமிகா கருணாரத்னே முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.