இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாம்பவான் சமீந்தா வாஸ் நியமனம்! ரசிகர்கள் மகிழ்ச்சி
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களை வீழ்த்தியுள்ளவர் இலங்கை ஜாம்பவான் சமீந்தா வாஸ்.
இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 355 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார்.
இந்தளவுக்கு அனுபவம் வாய்ந்த 47 வயதான சமீந்தா வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமீந்தா வாஸ் செயல்படவுள்ளார்.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் அதிகாரபூர்வாக தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் சமீபத்திய செயல்பாடு விமர்னங்களை கிளப்பிய நிலையில் சமீந்தா வாஸின் நியமனம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.