ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு உண்மையான தலைவர்: சமிந்த வாஸ் புகழாரம்
இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸை பாராட்டி முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் பதிவிட்டுள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆடி வருகிறார்.
ஏற்கனவே ஓய்வை அறிவித்த அவருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டியாகும். இதனால் சக அணி வீரர்கள் அவருக்கு மரியாதை அளித்து ஆடுகளத்திற்குள் வரவேற்றனர்.
மேலும், ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்களும் மேத்யூஸிற்கு பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
நீங்கள் ஒரு உண்மையான தலைவர்
இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான சமிந்தா வாஸும் அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில், "ஏஞ்சலோ, உங்களது அற்புதமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! 15 ஆண்டுகளுக்கும் மேலான உங்கள் அர்ப்பணிப்பு, மீள்தன்மை மற்றும் ஆர்வம் பாராட்டுக்குரியது. நீங்கள் ஒரு உண்மையான தலைவர் மற்றும் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். உங்கள் இறுதி டெஸ்ட் போட்டியிலும் அடுத்த அத்தியாயத்திலும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
Congratulations on an incredible career, Angelo!
— Chaminda Vaas (@chaminda_vaas) June 17, 2025
15+ years of dedication, resilience & passion. A true leader and one of the finest all-rounders.
Wishing you the best on your final Test match and the next chapter ahead. #AngeloMathews🇱🇰 pic.twitter.com/UpZqpDjd8K
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |