சுரங்கப் பாதைக்குள் பாய்ந்த வெள்ளப்பெருக்கும் சேறும் : 7 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க பாதைக்குள் நீர் மற்றும் குப்பைகள் புகுந்ததில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சுரங்கப்பாதை விபத்து
வியாழக்கிழமையன்று உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள சுரங்கப் பாதைக்குள் திடீரென வெள்ள நீரும், குப்பை மண் சாரலும் புகுந்ததில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 18 தொழிலாளர்கள் வரை பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்(SDMA) தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் சுரங்கத்திற்கு சிக்கி இருப்பதாக நம்பப்படும் 3 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து எப்படி நடந்தது?
சமோலியின் பிபல்கோட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தெஹ்ரி புனல்மின் கழக திட்ட பகுதியில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்திற்கு கிட்டத்தட்ட 28 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக வெள்ள நீர் புகுந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டுள்ளது, இதில் பல தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு வெளியே அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
மாலை 6.30 மணியளவில் வெள்ள நீருடன் சேறும் புகுந்ததாக மாவட்ட மாஜிஸ்திரேட் கவுரவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதே இந்த கோர சம்பவத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |