சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு நகரம் ஒன்று திட்டம்
Chamonix will become the first town in the Alps to introduce tourist quotas: Chamonix என்னும் பிரெஞ்சு நகரம், சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது.
தென்கிழக்கு பிரான்சில் அமைந்துள்ள Chamonix நகரில், Lac Blanc மற்றும் Lacs des Chéserys என்னும் இரண்டு அழகான ஏரிகள் உள்ளன.
சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டம்
2,350 மீற்றர் உயரத்தில், தெளிவான தண்ணீர், தண்ணீரில் பிரதிபலிக்கும் Mont Blanc என்னும் மலை, பனிப்பாறைகள் என, அழகே உருவாக அமைந்துள்ளன அந்த ஏரிகள்.

ஆக, அந்த ஏரிகளைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமானோர் அங்கு குவிகிறார்கள்.
அவ்வகையில், Chamonix நகருக்கு நாளொன்றிற்கு 4,000க்கும் அதிகமானோர் வருகை புரிகிறார்கள்.
இப்படி எக்கச்சக்கமான மக்கள் அந்த ஏரிகளைக் காண வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், அந்த எண்ணிக்கையைக் குறைக்க Chamonix நகர கவுன்சில் திட்டமிட்டுவருகிறது.
அவ்வகையில், சாதாரண நாட்களில் நாளொன்றிற்கு 600 பேரையும், சுற்றுலா சீஸனில் நாளொன்றிற்கு 1,000 பேரையும் அனுமதிக்கும் வகையில் திட்டம் ஒன்றை தீட்டிவருகிறது Chamonix நகர கவுன்சில்.
அப்படி இந்த திட்டம் அமுலுக்கு வருமானால், சமீப காலத்தில் இப்படி சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திய முதல் ஆல்ப்ஸ் நகரம் என்னும் பெயரை Chamonix நகரம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.