தவெக ஆட்சியை பிடிக்குமா? அக்டோபரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு
தமிழக அரசியல் சூழல் குறித்து அக்டோபரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு குறித்து ரங்கராஜ் பாண்டே பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணி, தொடர்ந்து தனித்தே தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, தனது முதல் தேர்தலில் களம் காணும் தவெக என தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து, 2989 பேரிடம் 32 தொகுதிகளில் சாணக்யா சார்பில் நடத்திய கருத்துக்கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கியுள்ளார்.
இதில், 2019க்கு பின்னர் முதல்முறையாக திமுகவை விட அதிமுகவிற்கு அதிக ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |