தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை- வானிலை மையம்
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கன மழையும் பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உள்பட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுகளில் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |