வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை
கிழக்கிந்திய வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
இதனால் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு அதிக மழையை எதிர்பார்க்க முடியாது, லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து லேசான மழை பெய்தது. மேலும், மேக மூட்டத்துடன் மழை தூறல் இருக்கிறது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது, "சென்னையில் மேக மூட்டத்துடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |