32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், தமிழகத்தில் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், நாமக்கல், நாகை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |