தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
AFP
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 15-ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று(டிச 11), அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், இந்த 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |