தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்.., எங்கெல்லாம் தெரியுமா?
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஞாயிறு வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |