கொரோனா ஊரடங்கால் ஜேர்மன் அதிபருக்கு நேர்ந்த நிலை! உண்மையை ஒப்புக்கொண்ட ஏஞ்சலா மெர்க்கல்
கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது மற்ற ஜேர்மனியர்களைப் போலவே தானும் சிகையலங்காரம் செய்யாமல் இருந்ததாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உண்மையை ஒப்பு்ககொண்டுள்ளார்.
ஜேர்மனிய அதிகாரிகள் கடந்த நவம்பரில் நாட்டில் ஒரு கொரோனா வைரஸ் ஊரடங்கை விதித்தனர், 2021 பிப்ரவரி 14 வரை அதை நீட்டித்தனர்.
அத்தியாவசிய நோக்கங்களுக்காக வீட்டிலிருந்து 9 மைல்களுக்கு மேல் பயணிக்க வேண்டாம் என்று குடிமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு மத்தியில் மற்ற ஜேர்மனியர்களைப் போலவே, தானும் சிகையலங்காரம் செய்யாமல் இருந்ததாகவும், மேலும் தலைமுடியை ஸ்டைல் செய்ய உதவியாளரிடம் உதவியை நாடியதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக, நாம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து சுகாதார தேவைகளையும் கடைபிடிக்கிறோம்.
ஊரடங்கிற்கு மத்தியில் தலைமுடி மெதுவாக நிறம் மாறினாலும், அத்துடன் வாழ வேண்டியிருந்தது என்பது தான் உண்மை.
எனவே சிகையலங்கார கடைகள் மீண்டும் எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் என மெர்க்கல் கூறினார்.
தற்போது ஜேர்மனியில், மெர்க்கல் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு விதிகளின் காரணமாக நாட்டில் சிகையலங்கார கடைகள் மற்ற அத்தியாவசியமற்ற வணிகங்களைப் போலவே மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.