பொறுப்பேற்று 38 நாட்கள்... பிரித்தானிய புதிய சேன்சலரின் பதவி பறிப்பு: வெளிவரும் புதிய தகவல்
பிரித்தானியாவின் புதிய சேன்சலராக பொறுப்பேற்று 38 நாட்களேயான நிலையில், Kwasi Kwarteng-ன் பதவியை பிரதமர் லிஸ் ட்ரஸ் பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் குறித்த தகவலுக்கு உறுதியான பதில அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவருவதாகவே கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் பிரதமர் லிஸ் ட்ரஸ் ஊடகங்களை சந்திக்க இருக்கிறார்.
இதற்கு முன்னர் சேன்சலர் Kwasi Kwarteng பதவி பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
@PA
சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு அமெரிக்கா சென்றிருந்த சேன்சலர் Kwasi Kwarteng, பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று பகல் 10.45 மணியளவில் தான் நாடு திரும்பியிருந்தார்.
மேலும், பிரதமர் அலுவலகத்தில் அவர் நுழையும் காட்சிகள் ஊடகங்களில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், நாட்டின் புதிய சேன்சலராக நாதிம் ஜஹாவி மற்றும் சஜித் ஜாவித் ஆகியோரில் ஒருவர் தெரிவாகலாம் என கூறப்படுகிறது.
@AFP
இருவருமே முன்னாள் சேன்சலர்கள். பிரித்தானிய அரசியல் வரலாற்றில் மிக குறைந்த நாட்கள் சேன்சலராக பொறுப்பு வகித்துள்ள இரண்டாவது நபர் Kwasi Kwarteng என கூறப்படுகிறது.
1970ல் பிரதமர் எட்வர்ட் ஹீத் அமைச்சரவையில் சேன்சலராக பொறுப்பேற்றவர் Tory Iain Macleod. ஆனால் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், Tory Iain Macleod மரணமடைந்துள்ளார்.
மேலும், போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் நாதிம் ஜஹாவி 63 நாட்கள் சேன்சலராக பொறுப்பு வகித்திருந்தார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு கார்ப்பரேஷன் வரியை 19ல் இருந்து 25 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் கைவிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கார்ப்பரேஷன் வரி உயர்வை கட்டுப்படுத்துவது லிஸ் டிரஸ்ஸால் முன்னெடுக்கப்பட்ட முதன்மையான உறுதிமொழியாகும்