உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்கத் தயங்கும் ஜேர்மன் சேன்ஸலர்: குறையும் மக்கள் ஆதரவு
ஜேர்மன் சேன்ஸலர் உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்கத் தயக்கம் காட்டுவதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிக்குள் மட்டுமின்றி, மக்களிடமும் அவருக்கு ஆதரவு குறைந்து வருவதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஜேர்மன் நாடாளுமன்ற பாதுகாப்புக் கமிட்டியின் தலைவரான Marie-Agnes Strack-Zimmermann, நாம் இன்னமும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் விடயத்தில் பின்தங்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholzஇன் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்களே, அவர் உக்ரைனுக்கு கூடுதல் கனரக ஆயுதங்கள் வழங்க தயக்கம் காட்டுவதாக அவர் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இதற்கிடையில், நேற்று வெளியான ஆய்வு ஒன்றில், 52 சதவிகித ஜேர்மன் மக்கள், ஒரு சேன்ஸலராக Scholzஇன் பணி திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.