அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு இதுதான்!
நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்திய அணி, இனி அரையிறுதிக்குள் நுழைய ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.
நேற்று துபாயில் நடந்த சூப்பர 12 போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
சூப்பர் 12 சுற்று முடிவில் குரூப் 1 மற்றும் குரூப் 2 புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
தற்போது குரூப் 2 புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் ( 3 வெற்றி) 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பாகிஸ்தானை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் (2 வெற்றி, 1 தோல்வி) 4 புள்ளிகள், நியூசிலாந்து (1 வெற்றி, 1 தோல்வி) 2 புள்ளிகள், நமீபியா (1 வெற்றி, 1 தோல்வி) 4 புள்ளிகள், இந்தியா (2 தோல்வி) புள்ளிகள் ஏதுமில்லை, ஸ்காட்லாந்து (2 தோல்வி) புள்ளிகள் ஏதுமில்லை.
அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.
அதாவது, ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை அணியை வீழ்த்த வேண்டும், பின்னர் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காடலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக நெட் ரன் ரேட்டிடன் வெற்றிப்பெற வேண்டும்.
இப்படி நடந்தால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.