பிரித்தானியாவில் தொடர்ந்து இரண்டு முறை தேர்தலில் வென்ற இந்திய இளம்பெண்... பெருமையுடன் கூறும் தந்தை
இந்தியாவிலுள்ள சண்டிகரில் பிறந்த இளம்பெண் ஒருவர், பிரித்தானிய மாவட்டம் ஒன்றின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்திலுள்ள Elmbridge என்னும் இடத்தில், தொடர்ச்சியாக இரண்டு முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் பெயர் Charu Sood ஆகும்.
2018ஆம் ஆண்டு முதல் முறை இதே இருக்கைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட Charu, அப்போதே கவனம் ஈர்த்தார். இந்நிலையில், Charu, Elmbridge பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர் என்பதால், இந்த வெற்றி அவருக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்ற வெகு சிலரில் Charuவும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.
தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் வீழ்ச்சியை சந்தித்த நிலையிலும், Charu அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றார் என்கிறார் சண்டிகரில் வாழும் Charuவின் தந்தையான Shashi Bhushan Sood பெருமையுடன்! அத்துடன், சண்டிகரிலிருந்து Elmbridge பகுதியின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் Charuவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன் என்கிறார் அவர்.
மேலும், தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இளம்வயதினரில் Charuவும் ஒருவர் என்று கூறும் அவரது தந்தைக்கு, தனது மகள் சண்டிகரில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர் என்பதில் மிகவும் பெருமை!