சண்டிமல் விளாசிய சிக்ஸர்..மைதானத்திற்கு வெளியே இளைஞரை தாக்கிய பந்து! வைரலாகும் வீடியோ
இலங்கை வீரர் தினேஷ் சண்டில் அடித்த பந்து ஒன்று, மைதானத்திற்கு வெளியே பறந்து சாலையில் நடந்து சென்ற இளைஞரை லேசாக தாக்கியது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தினேஷ் சண்டிமல் இரட்டை சதம் விளாசி மிரட்டினார்.
சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர் இறுதிவரை களத்தில் நின்று 206 ஓட்டங்கள் எடுத்தார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை அவர் சிதறடித்தார்.
சண்டிமல் 189 ஓட்டங்களில் இருந்தபோது, அவுஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசினார். அவர் அடித்த பந்து மைதானத்தை தாண்டி வெளியே சென்றது.
What A Strike!#SLvAUS #DineshChandimal #MitchellStarcpic.twitter.com/H73UCbK4LJ
— CRICKETNMORE (@cricketnmore) July 11, 2022
அப்போது சாலையில் நடந்து சென்ற இளைஞர்களில் ஒருவர் மீது அந்த பந்து லேசாக தாக்கியது. எனினும் குறித்த இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் பந்தை மைதானத்தை நோக்கி எறிந்தனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.