ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி... யார் பேரப்பிள்ளை பணக்காரர்
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளார்.
கோடிகளை லாபமாக
தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெரும் வெற்றியை குவித்துள்ள நிலையில், சந்திரபாபு குடும்பத்தினரின் Heritage Foods நிறுவன பங்குகள் உச்சத்திற்கு குதித்தன.
இதனால், அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருக்கும் சந்திரபாபு நாயுடு குடும்பம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளது. Heritage Foods நிறுவனத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்திற்கு 35.7 சதவிகித பங்குகள் உள்ளன.
இது தவிர, சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரிக்கு 24.37 சதவிகிதமும், மகன் லோகேஷுக்கு 10.82 சதவிகிதமும் மருமகள் பிராமணிக்கு 24.37 சதவிகிதமும், 9 வயது பேரப்பிள்ளை நாரா தேவான்ஷுவுக்கு 0.06 சதவிகித பங்குகளும் சொந்தமாக உள்ளன.
இதில் நாரா தேவான்ஷுவுக்கு சொந்தமாக உள்ள 56,075 பங்குகளின் தற்போதைய மதிப்பு என்பது ரூ 4.1 கோடி என்றே கூறப்படுகிறது. ஜூன் 3ம் திகதி இந்த பங்குகளின் மதிப்பு ரூ 2.4 கோடி என இருந்துள்ளது.
நாராயண மூர்த்தியின் பேரப்பிள்ளை
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பங்குகள் உச்சத்தில் குதித்ததால், சந்திரபாபு நாயுடு குடும்பம் மொத்தமாக தங்களுக்கு சொந்தமாக உள்ள பங்குகளால் ரூ 1,225 கோடி அளவுக்கு சம்பாதித்துள்ளனர்.
இருப்பினும், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பேரப்பிள்ளையை ஒப்பிடுகையில், சந்திரபாபு நாயுடுவின் பேரப்பிள்ளையின் சொத்து மதிப்பு குறைவு தான். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பேரப்பிள்ளையான ஏகாகிர ரோஹன் மூர்த்திக்கு 0.04 சதவிகித பங்குகள் சொந்தமாக உள்ளன.
இந்த பங்குகளின் தர்போதைய மதிப்பு ரூ 240 கோடி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, சந்திரபாபு நாயுடுவின் நிறுவனம் மென்பொருள் வணிகம் சார்ந்ததல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |