ஆய்வு செய்த போது திடீரென வந்த ரயில்.., உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநிலத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்த நிலையில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு ஆய்வு
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் வரலாறு காணாத அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால், வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில், ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், மீட்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.
அவர் நேற்று விஜயவாடா அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வந்தார். அப்போது அங்குள்ள அதிகாரிகளுடன் பாலத்திற்கு சென்று ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக அந்த பாதையில் ரயில் வந்துவிட்டது. மிக அருகில் ரயில் வந்து விட்டதால் பாலத்தில் இருந்து அவரால் இறங்க முடியவில்லை.
இதையடுத்து தண்டவாளத்திற்கு அருகே பாலத்தில் ஓரமாக நின்றார் அப்போது அவரது பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர், அந்த பாதையில் ரயில் கடந்து சென்றது.
அந்த நேரத்தில் அதிகாரிகள் பதற்றமாக இருந்தாலும் சந்திரபாபு நாயுடு நிதனமாகவே இருந்தார். பின்னர், தனது ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |