'சந்திரமுகி -2' இன் டிரெய்லர்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள் (வீடியோ)
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வரவிருகின்ற திரைப்படம் தான் 'சந்திரமுகி -2'.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை எற்படுத்தியுள்ளது எனலாம்.
சந்திரமுகி- 2
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம் சந்திரமுகி- 2.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகியமொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும் திரைப்படமானது வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து அப்படத்தின் முதலாவது பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரெய்லர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |