தமிழகத்துக்கு பெருமை! சந்திரயான் -3 இன் வெற்றிக்கு காரணமான மற்றொரு விஞ்ஞானி
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றிக்கு பல விஞ்ஞானிகள் காரணமாக இருந்துள்ளார்கள்.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி கம்பிளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் பங்கு உள்ளது.
சந்திரயான்-3
சந்திரயான் விண்கலமானது கடந்த 23 ஆம் திகதியன்று மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இதற்காக பல விஞ்ஞானிகளும் இரவும் பகலுமாக உழைத்து இந்த வெற்றியை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்து ஜி. காமேஷ் குரு என்பவரும் காரணமாக இருந்துள்ளார்.
இவர் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பையும், திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரியானார்.
அதன் பின் இஸ்ரோ விஞ்ஞானியாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளார்.
சந்திரயான்-3 பணியின் ஏவுகணை வாகனம், செயற்கைக்கோள் உந்துவிசை அமைப்புகளில் விஞ்ஞானி, செயற்கைக்கோள் திரவ இன்ஜின் தரக்கட்டுப்பாட்டில் இன்ஜினியராக இருந்துள்ளார்.
மேலும் சந்திரயான் -3 வெற்றியை அடுத்து, சூரியனை நோக்கி செல்லவுள்ள ஆதித்யா செயற்கைக்கோள் திட்டங்களிலும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |