நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் 3 விண்கலம்: இஸ்ரோ தகவல்
சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் திகதி நள்ளிரவு நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த மாதம் ஜூலை 14ம் திகதி சந்திரயான் 3 விண்கலத்தை வானில் வெற்றிகரமாக ஏவியது.
அத்துடன் சுமார் ரூ. 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்று வட்டப்பாதையில் நீட்டிக்க வைக்கும் பணியில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Twitter/ISRO
மேலும் கடந்த 26ம் திகதியோடு சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 5வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது.
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் 3
இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் திகதி நள்ளிரவு 12.05 மணி முதல் சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்து வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பயணிக்க தொடங்கியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 5, 2023
“MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity ?”
?
Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
The next… pic.twitter.com/6T5acwiEGb
மேலும் நள்ளிரவு 12.05 முதல் 1 மணி வரை சந்திராயன் 3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்துக்கான பணிகள் நடத்தி முடிக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23ம் திகதி நிலவில் மெதுவாக தரையிறக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |