வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் -3! சரித்திரம் படைத்த இந்தியா (நேரலை)
இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 14, 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்- 3 விண்கலம் ஏவப்பட்டது.
இதன் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
சரியாக 5.44 மணிக்கு, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தொடங்கியதும், மணிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
நிலவின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு லேண்டரின் வேகத்தை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒவ்வொரு நொடியையும் உற்றுநோக்கியது, பரபரப்பான தருணங்களுக்கு மத்தியில் சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.
வரலாற்று சாதனை
நிலவில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கியுள்ளன.
ஆனாலும், நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை.
தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.
முதல் இணைப்பு
நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்றைய தினம் மாலை 6.04 மணியளவில் தரையிறங்கவுள்ளது. இது வெற்றியை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையில் உலக மக்கள் காத்து இருக்கிறார்கள்.
இதை உலக மக்கள் நேரலையாக காண விரும்புவதால் இஸ்ரோ ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
ஆகவே இதை நேரலையாக பார்க்க விரும்புவர்கள் இந்த வீடியோவின் மூலம் பார்த்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |