சந்திரயான்- 3 தரையிறங்கும் நேரத்தில் மாற்றத்தை அறிவித்த இஸ்ரோ
இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலமானது வருகின்ற புதன்கிழமை அதாவது 23ஆம் திகதி நிலவில் தரையிறங்கவுள்ள நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சந்திரயான்- 3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ நிலவுக்கு அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த விண்கலமானது வருகின்ற 23ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
நேரத்தில் மாற்றம்
இது மாலை 5.45 மணியளவில் தரையிறங்கும் என முன்னரே அறிவிக்கப்படிருந்தது. ஆனால் மாலை 6.04 மணிக்கு தரையிறங்கும் என நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கதில் தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 20, 2023
??Chandrayaan-3 is set to land on the moon ?on August 23, 2023, around 18:04 Hrs. IST.
Thanks for the wishes and positivity!
Let’s continue experiencing the journey together
as the action unfolds LIVE at:
ISRO Website https://t.co/osrHMk7MZL
YouTube… pic.twitter.com/zyu1sdVpoE
மேலும் ரஷ்யாவின் லூனா -25 பயணம் நேற்றைய தினம் தோல்வியை பெற்றதால், நிலவின் தென்துருவத்தில் முதலில் தரையிறங்கும் பெருமையை சந்திரயான் -3 இந்தியாவிற்கு பெற்று தரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |