நிலவிற்கு சென்ற நாடுகள் எத்தனை.... சந்திரயான்-3 வரலாற்று சாதனை படைக்குமா?
பொதுவாகவே விண்வெளிக்கு ஒரு பயணம் என்றால் அது ஒரு சுவாரஸ்மான விடயம் தான். விண்வெளியில் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு கிரகமாக இருப்பது நிலவு தான். இதனால் நிலவிற்கு சென்று அங்கு ஆராய்வதற்கு பல நாடுகளும் தங்களது முயற்சிகளை மேற்கொண்டு, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் எந்த நாடுகள் அந்த முயற்சியை எடுத்தன? இந்த நாடுகள் அதில் வெற்றியை பெற்றது என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- சுமார் 1958 ஆம் ஆண்டுகள் முதல் இன்று வரை 140 முறைகள் நிலவுக்கு விண்கலத்தை பல நாடுகள் அனுப்பியுள்ளன. அதிலும் ஒரு சில திட்டத்தில் தான் மனிதர்களை அனுப்பின, பெரும்பாலான திட்டங்கள் ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவையாக தான் இருந்தது.
- இதுவரையில் 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளன. இதில் 6 மனிதர்கள் இயக்கியது. மீதமுள்ள 12 மனிதர்கள் அற்ற விண்கலங்கள்.
- 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா அனுப்பியது. ஆனால் அதனால் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் 1966 ஆம் ஆண்டு அனுப்பட்ட லூனா-9 Soft land செய்யப்பட்டு, வரலாற்றில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற இடத்தை பிடித்தது.
- அதன்பின் 3 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் முயற்சியால், நிலவில் மனிதனை கால்பதிக்க 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, இதில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்றார்.
- 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பப்பட்டு 12 பேர் நிலவில் கால் பதிக்க அமெரிக்கா ஒரு ஊன்றுகோலாக இருந்துள்ளது. அந்த வகையில் நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென் ஆவார்.
- முன்னாள் சோவியத் யூனியன் முதலில் விண்கலத்தை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்து, அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் கெமரா பொருத்தப்பட்டு நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது.
- சர்வேயர் என்ற திட்டத்தில் 5 ஆளில்லாக் விண் கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட ஆறு விண்கலங்களையும் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனையை பெற்றது அமெரிக்கா.
- சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் மனிதர்கள் அற்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி, மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது.
- ஜப்பானும் நிலவு குறித்து தனது ஆய்வுகளை செய்து வருகின்றது.
- சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
- 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “யுடு”ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3-வது நாடாகியது சீனா. சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. மேலும் 2030 ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இதுவரையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகளாக இருகின்றன.
ஆனால் நிலவின் தென்துருவத்தில் எந்த ஒரு நாடும் தனது பயணத்தை மேற்க்கொண்டது இல்லை. அதை செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் லூனா 25 மற்றும் சந்திரயான்-3 அனுப்பட்டது. அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ரஷ்யா அனுப்பிய லூனா 25 சிதறியது. ஆனால் இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலமானது தொடர்ந்து தனது பயணத்தை மேற்க்கொண்டு வருகின்றது.
ஆகவே இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் சந்திரயான் -3 நிலவின் தென்துருவத்தில் மென்மையாக தரையிறங்கி, வரலாற்று சாதனையை தன் கைவசம் எடுத்துக்கொள்ளும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |