சந்திரயான்-3- இன்று தொடங்குகிறது கவுண்டவுன்
ஜூலை 14ம் தேதி நாளை விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்- 3, அதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது.
நிலவை ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் ஈடுபட்டுள்ளன, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இதற்காக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்- 1 என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, 2019ம் ஆண்டு சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது, ஆனால் இறுதிகட்டத்தில் தேல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில் நாளை சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது, நாளை உள்ளூர் நேரப்படி 2.35 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ளது.
சந்திரயான்- 2ல் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி சந்திரயான்-3 திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணை மூலம் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3.
நிலவை பற்றிய புரிதலை சந்திரயான்- 3 ஆழப்படுத்தும் என்றும், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி, ரோபோ ரோவரை இயக்கி நிலவை ஆராய்வதே சந்திரயான்- 3ன் பணி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அறிவியல் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை பார்க்க நேரலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |