இன்று விண்ணில் பாய உள்ள சந்திரயான்-3 : திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
இன்று விண்ணில் சந்திரயான்-3 விண்கலம் பாய உள்ள நிலையில், திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு செய்தனர்.
திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள்
சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ளது. இன்று அந்த விண்கலம் ஏவப்பட்டு, வரும் ஆகஸ்ட் 23 அல்லது 24-ந் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது.
இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், நேற்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார்பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்குச் சென்ற அவர்கள் ஏழுமலையான் கடவுளை வணங்கும்போது, சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | "This is Chandrayaan-3 --- our mission to the moon...We have a launch tomorrow," says the team of ISRO scientists after offering prayers at Tirupati Venkatachalapathy Temple in Andhra Pradesh. pic.twitter.com/xkQb1SuX4V
— ANI (@ANI) July 13, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |