YouTube இல் சாதனை படைத்த சந்திரயான்-3
இந்தியாவில் இருந்து அனுப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது நேற்று நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது உலக சாதனை படைத்தது என்று யாரும் அறிந்த விடயமே. ஆனால் இதனால் இன்னுமொரு பெருமையும் சந்திரயனால் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
சந்திரயானால் கிடைத்த மற்றுமொறு பெருமை
நேற்றைய தினம் முழுவதும் உலகவாழ் மக்களின் நாவில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட ஒரு சொல்லாக இருப்பது சந்திரயான்-3 மட்டும் தான். இந்த நிகழ்வானது அனைவரினது கவனத்தையும் ஈர்த்தது.
சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் தென் துருவத்தை அடையவுள்ளதை இஸ்ரோ தனது Youtube பக்கதத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதை சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுக்களித்தனர்.
"Chandrayaan-3 lands on the moon, with nearly 8 million people watching live on ISRO's Official YouTube channel during its peak time. This marks the highest viewership for any live stream on YouTube."#Chandrayaan3 #ISRO pic.twitter.com/c3ln4pDYET
— Upsc Civil Services Exam (@UpscforAll) August 23, 2023
இதற்கு முன்பாக ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் 34 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு உலக சாதனையை கைவசம் வைத்திருந்தது. ஆனால் அந்த சாதனையையும் சந்திரயான்-3 நேரலை முறியடித்து இந்தியாவிற்கு அந்த பெருமையைக்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |