சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு... ஒரேயடியாக ரூ 9200 கோடி என அதிகரித்த ஒருவரின் சொத்து மதிப்பு: யாரவர்
இந்திய விண்வெளி நிறுவனமான ISRO சந்திரயான்-3ஐ நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதில் ஆகஸ்ட் 23 அன்று வெற்றி பெற்றது.
Kaynes Technology
இந்திய மதிப்பில் ரூ 615 கோடி செலவிடப்பட்ட இந்த திட்டமானது பெரும் வெற்றியையும் பதிவு செய்தது. சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலவின் மேற்பரப்பை ஆராய்வதேயாகும்.
இந்த திட்டத்திற்காக நிபுணர்கள் பலர், நிறுவனங்கள் பல என இணைந்து செயல்பட்டனர். அதில் ஒரு நிறுவனந்தான் Kaynes Technology. கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் இருந்து செயல்படும் இந்த நிறுவனந்தான் சந்திரயான்-3 திட்டத்திற்கான மின்னணு அமைப்புகளை வழங்கியது.
கெய்ன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரமேஷ் கண்ணன் இதனால் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியையடுத்து கெய்ன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் வரையில் அதிகரித்தது.
சுமார் 9200 கோடி ரூபாய்
இதனையடுத்து ரமேஷ் கண்ணனின் சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் எனவும் ஒரேயடியாக அதிகரித்து, இந்திய மதிப்பில் சுமார் 9200 கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.
மின் பொறியாளரான ரமேஷ் கண்ணன் 1988ல் Kaynes Technology என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார். இவரது மனைவி சவிதா ரமேஷ் தற்போது Kaynes Technology நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |